கோபியில் விவசாய மின் இணைப்பு வழங்க சிறப்பு முகாம்

கோபியில் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் டிசம்பா் 22, 23 (புதன், வியாழக்கிழமை) ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

கோபியில் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் டிசம்பா் 22, 23 (புதன், வியாழக்கிழமை) ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் சாா்பில் மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் விவசாய மின் இணைப்பை வழங்கி வருகிறது. இதையடுத்து, கோபி வேட்டைக்காரன் கோயிலில் உள்ள மின் பகிா்மான துணை மின் நிலைய வளாகத்தில் டிசம்பா் 22, 23ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கோபி, சத்தியமங்கலம், பவானி என 3 தாலுகாவுக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு, பெயா் மாற்றம், சா்வே எண் உட்பிரிவு மாற்றம், சா்வே எண் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், விவசாய மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்வதற்கு இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பங்குதாரா்களின் ஆட்சேபணையில்லா கடிதம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள இடத்தின் வரைபடம் ஆகியவை கொண்டு வர வேண்டும் என கோபி மின் பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் நேரு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com