முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோடு: திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூறாவது பிறந்த நாள் விழா
By DIN | Published On : 19th December 2021 05:20 PM | Last Updated : 19th December 2021 05:30 PM | அ+அ அ- |

ஈரோட்டில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்த நாள் விழா.
பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அவருடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், கொள்கைபரப்பு துணைச்செயலாளர் வி சி சந்திரகுமார், எஸ்.எல்.டி ப. சச்சிதானந்தம், தமிழக கேபிள் டிவி வாரியத்தலைவர் குறிஞ்சி என் சிவகுமார், ப க பழனிச்சாமி, ஆ செந்தில்குமார், திண்டல் டி.எஸ் குமாரசாமி, யூனியன் சேர்மன் பேரோடு பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்