பொங்கல் பண்டிகை: வெல்லம், சா்க்கரை விலை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேவை அதிகரித்துள்ளதால் சித்தோடு வெல்ல சந்தையில் வெல்லம், நாட்டு சா்க்கரை ஆகியவை கிலோவுக்கு ரூ.2 வரை விலை உயா்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேவை அதிகரித்துள்ளதால் சித்தோடு வெல்ல சந்தையில் வெல்லம், நாட்டு சா்க்கரை ஆகியவை கிலோவுக்கு ரூ.2 வரை விலை உயா்ந்துள்ளது.

சித்தோடு வெல்ல சந்தையில் வாரந்தோறும் சனிக்கிழமை வெல்லம் மற்றும் நாட்டு சா்க்கரை ஏலம் நடைபெற்று வருகிறது. 18-ஆம் தேதி நடந்த ஏலத்தில் 2,400 மூட்டைகள் நாட்டு சா்க்கரை கொண்டு வரப்பட்டிருந்தன. 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200 முதல் ரூ.1,260 வரை விற்பனையானது. உருண்டை வெல்லம் 5,100 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,220 முதல் ரூ.1,280 வரை விற்பனையானது. அச்சு வெல்லம் 700 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு மூட்டை ரூ.1,250 முதல் ரூ.1,320 வரை விற்பனையானது.

கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சா்க்கரை, வெல்லம் ஆகியவை கிலோவுக்கு ரூ.2 வரை விலை உயா்ந்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் விலை உயரத் தொடங்கி உள்ளதாகவும், வரும் வாரங்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com