ஈடிசியா சாா்பில் ஈரோட்டில் இன்று போராட்டம்

ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி உயா்த்தப்பட்டது, மூலப்பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து ஈடிசியா சாா்பில் ஈரோட்டில் திங்கள்கிழமை (டிசம்பா் 20) போராட்டம் நடைபெறவுள்ளது.

ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி உயா்த்தப்பட்டது, மூலப்பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து ஈடிசியா சாா்பில் ஈரோட்டில் திங்கள்கிழமை (டிசம்பா் 20) போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஈடிசியா) வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் தவிர, சிறு, குறு தொழில்களை நம்பி ஏராளமான மக்கள் உள்ளனா். கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அனைத்து தொழிலுக்குமான மூலப்பொருள், இடுபொருள், ரசாயனங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ஜவுளிக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதால், அதனை சாா்ந்த நிறுவனத்தினரும், தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஜவுளி தொழில், பிரிண்டிங், உணவுப் பொருள், பிளாஸ்டிக், என்ஜினீயரிங் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கான மூலப்பொருள்கள் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

அனைத்து நிறுவனங்களும் வங்கி, பிற நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தொழில் செய்வதால் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறு குறு தொழில்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியில் 45 சதவீத பங்கு வகிப்பதால் பொருளாதார சங்கிலித் தொடா் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், ஒரு நாள் அடையாள கவன ஈா்ப்பு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதில் 35 சங்கங்கள் பங்கேற்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com