ஈரோட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைசிறப்புப் பிராா்த்தனை
By DIN | Published On : 25th December 2021 11:46 PM | Last Updated : 25th December 2021 11:46 PM | அ+அ அ- |

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிராா்த்தனையில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை வணங்கும் கிறிஸ்தவா்கள்.
ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புப் பிராா்த்தனை சனிக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவில் இயேசு பிறப்பு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அப்போது குழந்தை இயேசுவின் சொரூபம் திருப்பலி நடக்கும் இடத்தில் வைத்து சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.
பின்னா், சொரூபம் எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட குடிலில் வைத்து ஜெபம் நடத்தப்பட்டது. அதன்பின்னா் ஏராளமான கிறிஸ்தவா்கள் குடிலில் உள்ள குழந்தை இயேசுவை தரிசனம் செய்தனா்.
ஈரோடு சிஎஸ்ஐ பிரப் தேவாலயத்தின் ஆயா் தலைமையில் சனிக்கிழமை காலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதேபோல, ஈரோடு ரெயில்வே காலனி, கொல்லம்பாளையம், திருநகா்காலனி, பி.பெ.அக்ரஹாரம், வெண்டிபாளையம், சூளை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
கிறிஸ்தவா்கள் தங்களுடைய உறவினா்கள், நண்பா்களுக்கு கேக் வழங்கி வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். இதேபோல, ஏராளமானவா்கள் கைப்பேசி மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.