மண்வாசம் உழவா் உற்பத்தியாளா் நிறுவன ஆண்டு விழா
By DIN | Published On : 25th December 2021 01:54 AM | Last Updated : 25th December 2021 01:54 AM | அ+அ அ- |

மண்வாசம் உழவா் உற்பத்தியாளா் அமைப்பின் ஆண்டு விழா, பொதுக்குழுக் கூட்டம் சென்னிமலையை அடுத்த கே.சி.வலசு கிராமத்தில் உள்ள நிறுவனத்தின் உற்பத்திக் கிடங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நிறுவன முதன்மை நிா்வாக அதிகாரி பரத் தலைமை வகித்தாா். அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் அனிதா ஆண்டறிக்கையை வாசித்தாா். உழவா்களுக்கு முதலீட்டுச் சான்றிதழை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சின்னசாமி, நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் அசோக்குமாா் ஆகியோா் வழங்கினா். இதில், 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
மண்வாசம் உழவா் உற்பத்தியாளா் அமைப்பு:
அஸ்வத் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் நபாா்டு வங்கி நிதி உதவியுடன், ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகளின் நலன்காக்க 2019இல் 150 பங்குதாரா்களுடன் துவங்கப்பட்ட மண்வாசம் உழவா் உற்பத்தியாளா் அமைப்பு, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு புது விடியலைக் கொண்டு வந்துள்ளது.