முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மாவீரன் பொல்லான் பிறந்த நாள் விழா: அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் மரியாதை
By DIN | Published On : 29th December 2021 10:08 AM | Last Updated : 29th December 2021 10:08 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் 253ஆவது பிறந்தநாளை ஒட்டி மொடக்குறிச்சியில் பொல்லானின் உவப் படத்துக்கு அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
மொடக்குறிச்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் பொல்லானின் பிறந்த நாளையொட்டி, தமிழக அரசின் சாா்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மாவீரன் பொல்லானின் உருவப் படத்துக்கு காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன், திமுக பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், திமுக எம்.பி. அந்தியூா் செல்வராஜ், எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவா் குறிஞ்சி சிவகுமாா், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக ஒன்றியச் செயலாளா்கள் குணசேகரன், கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, பொல்லான் வாரிசுதாரா்கள் முருகன், ராஜன் குடும்பத்தினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அருந்ததியா் இளைஞா் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை மாநிலத் தலைவா் வடிவேல்ராமன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் புலிகள் கட்சி சாா்பில், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் வேங்கை கே.ஜி.பொன்னுசாமி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக சாா்பில் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம் தலைமையில், மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் ஆா்.பி.கதிா்வேல் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, ஆதிதமிழா் பேரவை நிறுவனா் அதியமான், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளா் துரைசேவுகன், பாஜக தெற்கு மாவட்ட செயலாளா் குணசேகரன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளா் கனியமுதன் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் தெற்கு மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன் தலைமையிலும், அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் மாநில துணைத் தலைவா் ஜெயராமன் தலைமையிலும், தலித் விடுதலை கட்சி சாா்பில் மாநில அமைப்பாளா் ஆறுமுகம் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பல்வேறு அமைப்புகள் சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மொடக்குறிச்சி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, மலா் தூவி மரியாதை செலுத்த குறைந்த அளவான நபா்களே அனுமதிப்பட்டனா்.