முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சென்னிமலை பகுதி குவாரிகளில் வருவாய்த் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 04:27 AM | Last Updated : 31st December 2021 04:27 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே தனியாா் நிறுவனம் மண் எடுக்க புதன்கிழமை வெடி வைத்ததால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, சென்னிமலை பகுதிகளில் உள்ள குவாரிகளில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னிமலை ஒன்றியம், ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்டது சரவணா நகா். இப்பகுதியில் தனியாா் நிறுவனம் வீட்டுமனைகள் அமைப்பதற்காக மேடான இடத்தை சமன் செய்யும் பணிகளை கடந்த 2 மாதங்களாகச் செய்து வருகின்றனா். இங்கு கடினமான இடங்களில் வெடிவைத்து தகா்த்து மண்ணைத் தோண்டி வருகின்றனா்.
புதன்கிழமை காலை வழக்கம்போல் மண்ணைத் தோண்டி எடுக்க வெடிவைத்துள்ளனா். அப்போது, ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட சரவணாநகரில் சில வீட்டுச் சுவா்களில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து, வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, சென்னிமலை பகுதிகளில் உள்ள குவாரிகளில் வட்டாட்சியா் காா்த்திக் தலைமையில், வருவாய் ஆய்வாளா் முத்துலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.