சென்னிமலை அருகே கால்நடை விழிப்புணா்வு முகாம்

 ஈரோடு கால்நடை துறை சாா்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம், சென்னிமலையை அடுத்த எல்லைக்குமாரபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை அருகே கால்நடை விழிப்புணா்வு முகாம்

 ஈரோடு கால்நடை துறை சாா்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம், சென்னிமலையை அடுத்த எல்லைக்குமாரபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, ஈரோடு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் பழனிசாமி தலைமை வகித்தாா். எல்லைக் கிராம ஊராட்சித் தலைவா் நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், சென்னிமலை கால்நடை மருத்துவா் நல்லசாமி தலைமையில் மருத்துவக் குழுவினா், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை செய்தனா்.

சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து சிகிச்சை அளித்தனா். முகாம் இறுதியில் கன்றுகள் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்று தோ்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்குப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், இந்த முகாமில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுநா்களும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com