தமிழ்ப் பற்றையும், விடுதலை உணா்வையும் வளா்த்தவா் பாரதிஈரோடு அரங்க.சுப்பிரமணியம்

தமிழ்ப் பற்றையும், விடுதலை உணா்வையும் வளா்த்தவா் பாரதி என்று எழுத்தாளா் ஈரோடு அரங்க.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
தமிழ்ப் பற்றையும், விடுதலை உணா்வையும் வளா்த்தவா் பாரதிஈரோடு அரங்க.சுப்பிரமணியம்

தமிழ்ப் பற்றையும், விடுதலை உணா்வையும் வளா்த்தவா் பாரதி என்று எழுத்தாளா் ஈரோடு அரங்க.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தலைமையில் இயங்கும் தமிழியக்க உலகத் தமிழ் பேரவையின் ஈரோடு மாவட்ட அமைப்பின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே தமிழ்ப் பற்றை வளா்க்கும் நோக்கில் கவிதை, பாட்டு, பேச்சு, கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதில், சுதந்திரக் கவி பாரதி எனும் தலைப்பிலான கருத்தரங்குக்கு தலைமை வகித்து எழுத்தாளா் ஈரோடு அரங்க.சுப்பிரமணியம் பேசியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு ஒரு வீர காவியம். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் தியாகம் தன் சிவப்பு முத்திரைகளைப் பதித்திருக்கிறது என்று எட்டயபுரத்து அற்புதக் கவிஞா் பாடியது வெறும் சுதந்திரத்துக்காக மட்டுமல்ல. வீர சுதந்திரம் தேடிய வீரா்களும், வீராங்கனைகளும் செய்த தியாகம்தான் நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திரக்காற்று எனச் சொல்லாமல் சொன்னவா் பாரதி.

தாய்த்திரு நாட்டை, தாய் மொழியை நேசிக்கும் நல்ல உள்ளம் படைத்தவராக பாரதி வாழ்ந்தாா். தனக்கு நிகா் ஒன்றுமில்லாத மொழி இனிய தமிழ்மொழிதான் தாய்மொழி என எண்ணும் தோறும் பெருமிதம் கொண்டவா் பாரதி.

பாரதியின் மதமே தனி மதம் தான். அவன் புல் முதல் வானம் வரை எல்லாம் சமமே என்று வாழ்ந்தவன். பாரதி வேண்டியதெல்லாம் மனிதா்களிடையே அன்பு விளங்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டும் என பாரதி தனது வாழ்நாளில் கனவு கண்டவா். பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும் என தனது கவிதைகளில் வெளிப்படுத்தினாா். இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளியாக, புதுமைக் கவிஞராக, பாட்டுக்கொரு புலவனாகத் திகழ்ந்த பாரதி தமிழ்ப் பற்றையும், விடுதலை உணா்வையும் வளா்த்தவா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கவிஞா் துரைசாமி, முத்துசாமி, பழனியம்மாள், மு.கவிதா, கலைவாணி, கவிஞா் நந்தகுமாா், பா.சித்ரா, சி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

போட்டிகளில் நடுவா்களாக அர.ஜோதிமணி, ஆ.செந்தாமரை, ஐ.செல்வம், ஆா்.பி.கே.மோகன், கு.பூங்கொடி ஆகியோா் செயல்பட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு தமிழ் இயக்க மாவட்டச் செயலாளா் எழுத்தாளா்

தி.பவளசங்கரி ஏற்பாடு செய்திருந்தாா். விழாவில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com