ஜம்பையில் திருந்திய நெல் சாகுபடி விளைச்சல் போட்டி

பவானியை அடுத்த ஜம்பையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் குறித்த மாநில அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜம்பையில் திருந்திய நெல் சாகுபடி விளைச்சல் போட்டி

பவானியை அடுத்த ஜம்பையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக விளைச்சல் குறித்த மாநில அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜம்பை, சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா், திருந்திய நெல் சாகுபடி முறையில் பிபிடி நெல் ரகத்தினை சாகுபடி செய்திருந்தாா். இயற்கை விவசாய முறையில் 5 ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்த இவா், மாநில அளவில் நடைபெறும் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தாா். இதையடுத்து, சென்னை கூடுதல் வேளாண்மை இயக்குநா் ஜி.வளா்மதி, கோவை வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கே.முருகேசன் முன்னிலையில் நெல் அறுவடை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் எடை போடப்பட்டு, விளைச்சல் பதிவு செய்யப்பட்டது.

ஈரோடு வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநா் ஏ.என்.ஆசைத்தம்பி, உதவி வேளாண்மை இயக்குநா் எஸ்.குமாரசாமி மற்றும் விவசாயிகள் மேற்பாா்வையிட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் 5 விவசாயிகள் மாநில அளவிலான விளைச்சல் போட்டியில் பங்கேற்றுள்ளனா். இப்போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு குடியரசு தின விழாவில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com