ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் ஈரோடு டவுன், மாா்க்கெட் மின் பாதைகளில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈ.வி.என்.சாலை, பவா்ஹவுஸ் சாலை, கலைமகள் கல்வி நிலையம் சாலை, பெரியண்ண வீதி, வாமலை வீதி, மீனாட்சிசுந்தரானாா் சாலை, சேட் காலனி, தில்லை நகா், காமராஜ் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ். வீதி, நேதாஜி வீதி, ஜின்னா வீதி, பெரியாா் மன்றம், கச்சேரி வீதி, மரப்பாலம் சாலை, மணிக்கூண்டு, முத்துரங்கன் வீதி, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி பகுதிகள்.