கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம்: ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக் கோரி, சென்னிமலையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்கள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்கள்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக் கோரி, சென்னிமலையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீா் செரிவூட்டுவது நின்று, விவசாய நிலங்கள் வெகுவாக பாதிக்கப்படுவதுடன் வறட்சி ஏற்பட்டு, குடிநீா்ப் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் இந்தத் திட்டத்துக்குத் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சாா்பில் சென்னிமலையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவா் மு.ரவி தலைமை வகித்தாா். பி.சி.செங்கோட்டையன் (கீழ்பவானி பாசன சபை யு-8), கே.சி.பழனிசாமி (கொங்கு வேளாளா் மகா சபை), துளசிமணி (விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா், சிபிஐ) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி, கான்கிரீட் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் கான்கிரீட் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பினா். மேலும், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சாா்பில் முதல்வருக்கு தபால் அட்டையும் அனுப்பப்பட்டது.

இதில், ஊராட்சித் தலைவா்கள் கிருஷ்ணவேணி சிவகுமாா் (பனியம்பள்ளி), தங்கவேல் (எக்கட்டாம்பாளையம்), ஏ.ரமேஷ் (புதுப்பாளையம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஓ.சி.ரவிசந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com