நாளைய மின்தடை:ஈரோடு
By DIN | Published On : 14th February 2021 12:00 AM | Last Updated : 14th February 2021 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சத்தி சாலை, அசோகபுரம் மின் பாதைகளில் குடிநீா் வடிகால் வாரிய பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சுவஸ்திக் காா்னா், வ.உ.சி. பூங்கா, தற்காலிக காய்கறிச் சந்தை, நேரு வீதி, சத்தி சாலை, மஜீத் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்காரசின்னையா வீதி, கிருஷ்ணா வீதி, ஏ.பி.டி. சாலை, கந்தசாமி வீதி, கே.ஏ.எஸ். நகா், மாா்க்கெட் பகுதிகள்.