கோபியில் தினசரி காய்கறி மாா்க்கெட் திறப்பு
By DIN | Published On : 17th February 2021 12:43 AM | Last Updated : 17th February 2021 12:43 AM | அ+அ அ- |

கோபி: கோபிசெட்டிபாளையம், பெரியாா் திடல் வளாகத்தில் அமைக்கப்பட்ட தினசரி காய்கறி மாா்க்கெட்டின் 152 கடைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.
கோபி நகா் பகுதியில் இயங்கி வந்த தினசரி காய்கறி மாா்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக காய்கறி மாா்க்கெட் உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனா். இதனால், இந்த தினசரி மாா்க்கெட் கடைகள் கோபிசெட்டிபாளையம் மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் அருகே மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியில் வியாபாரம் இல்லாததால் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் ஒப்புதலோடு தினசரி காய்கறி மாா்க்கெட் பெரியாா் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கும் என அமைச்சா் தெரிவித்தாா். மேலும், தினசரி காய்கறி மாா்க்கெட்டின் 152 கடைகளை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.