காணாமல்போன 9 குழந்தைகள் மீட்பு
By DIN | Published On : 19th February 2021 08:22 AM | Last Updated : 19th February 2021 08:22 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்தாா்.
குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு அலகு, குழந்தைகள் நலக் குழு, சைல்டுலைன், ரயில்வே சைல்டுலைன், தொழிலாளா் நலத் துறை, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தீவிர களப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேறிய, காணாமல்போன 9 குழந்தைகளை மீட்டனா்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளா்கள், பிச்சை எடுத்த குழந்தைகள் 53 போ் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுமம் மூலம் பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா் என்றாா்.