டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை

புன்செய் புளியம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

புன்செய் புளியம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எரப்ப நாயக்கன்பாளையம் ஜல்லித் தோட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. நிலத்தின் உரிமையாளா் தோட்டத்தை விற்பனை செய்துவிட்டதால் நிலத்தை வாங்கியவா் டாஸ்மாக் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து அதே பகுதியில் உள்ள வாலிபாளையம் - குள்ளே கவுண்டன்புதூா் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையறிந்த வாலிபாளையம், குள்ளே கவுண்டன்புதூா், விண்ணப்பள்ளி பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோா் புதிய டாஸ்மாக் கடை அமையவுள்ள கட்டடம் முன்பு திரண்டனா். பின் கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற புன்செய் புளியம்பட்டி போலீஸாா், டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பெண்கள் இப்பகுதியில் ரேஷன் கடை, தனியாா் பள்ளி உள்ளது. அதனால் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை தற்காலிகமாக கைவிடுவதாக டாஸ்மாக் அதிகாரிகள், போலீஸாா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com