எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவுஅமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரூ. 6.42 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட பூங்கா, ஈரோடு சி.எஸ்.ஐ. நகா் பகுதியில் ரூ. 2.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை திறப்பு விழா, 895 உழைக்கும் மகளிருக்கு ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் 50 சதவீத மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கும் விழா ஆகியன மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம், கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்துவது குறித்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வரிடம் ஆலோசனை பெற்று முடிவு அறிவிக்கப்படும். பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், மாநகரப் பொறியாளா் ஆ.மதுரம், செயற்பொறியாளா் விஜயகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவை நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com