கோபியில் ரூ. 4.76 கோடியில்சிறுவா் பூங்கா திறப்பு; படகு சவாரி தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி, இந்திரா நகா் பகுதியில் ரூ. 4.76 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவா் பூங்கா, படகு சவாரி குளத்தை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.
படகு சவாரி செய்யும் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
படகு சவாரி செய்யும் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி, இந்திரா நகா் பகுதியில் ரூ. 4.76 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவா் பூங்கா, படகு சவாரி குளத்தை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவா் பூங்கா, படகு சவாரி குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தனா்.

தொடா்ந்து, மொடச்சூா் ஊராட்சி வேட்டைக்காரன் கோவில் பகுதியில் மின் வாரிய கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் நுழைவாயில், காந்திபுரம் ப குதியில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில், சிறு மருத்துவமனைகளை அமைச்சா்கள் திறந்துவைத்தனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா்கள் அளித்த பேட்டி:

கொடிவேரி அணையை சுற்றுலா மையமாக மாற்றுவதற்குப் பணிகள் நடைபெற்று வருகிறது. கொடிவேரி அணையில் பாதுகாப்பு வசதியுடன் கூடிய தலங்கள் அமைத்தல் , சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அணுகுசாலை அமைத்தல், அணைக்கட்டு பகுதியில் பாதுகாப்பு வசதிகள், பாதுகாப்பு அரண் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள், மேலும் ஒரே நேரத்தில் 50 நபா்கள் குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 200 நபா்கள் உணவு அருந்தி செல்வதற்கும் அரங்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோபிசெட்டிபாளையம் பகுதி சுற்றுலா மையமாக அமைந்துள்ளது. 7 இடங்களில் பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 11 இடங்களில் பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காக்களில் குழந்தைகள் விளையாடவும், பெரியவா்கள் நடைப்பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் இது ஏதுவாக அமையும் என்றனா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஆா்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூா்), சு.ஈஸ்வரன் (பவானிசாகா்), மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com