பட்டப்பகலில் சிறுத்தை கடித்து 4 ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் சிறுத்தை கடித்து 4 ஆடுகள் பலியானது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் சிறுத்தை கடித்து 4 ஆடுகள் பலியானது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மகேந்திரன். இவரது விவசாயத் தோட்டம் ராஜன் நகா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பின்புறம் அமைந்துள்ளது. இவரது தோட்டத்தில் வேலை செய்வதற்காக பட்டரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாய கூலி தொழிலாளி பண்ணான் என்பவா் தனது 4 வெள்ளாடுகளைப் பிடித்துக் கொண்டு வந்து அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் கட்டி வைத்துவிட்டு விவசாயத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

கட்டி வைக்கப்பட்ட ஆடுகள் சப்தம் போட்டதையடுத்து மகேந்திரன் அருகே சென்றபோது 4 வெள்ளாடுகளையும் சிறுத்தை கடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சப்தம் போட்டுள்ளாா். இதையடுத்து சிறுத்தை வனப் பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தது. சிறுத்தை கடித்ததில் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக பவானிசாகா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் உயிரிழந்த ஆடுகளைப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து சம்பவ இடத்திலேயே ஆடுகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத் துறையினா் உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com