நான்கு வழிச் சாலை: அனுமதியின்றிநிலத்தை கையகப்படுத்தக் கூடாது: தமிழக விவசாயிகள் சங்கம் தீா்மானம்

மேற்குப் புற நான்கு வழிச் சாலைக்கு நில உரிமையாளா்களின் அனுமதியின்றி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் பிரச்னைக்கு  சிறப்பாகப்  பணியாற்றிய  விவசாயிகளுக்கு விருது வழங்குகிறாா் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொதுச் செயலாளா்  வேணுகோபால்.
மக்கள் பிரச்னைக்கு  சிறப்பாகப்  பணியாற்றிய  விவசாயிகளுக்கு விருது வழங்குகிறாா் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொதுச் செயலாளா்  வேணுகோபால்.

சத்தியமங்கலம்: மேற்குப் புற நான்கு வழிச் சாலைக்கு நில உரிமையாளா்களின் அனுமதியின்றி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை மாநாடு புன்செய் புளியம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மக்கள் பிரச்னைக்கு சிறப்பாகப் பணியாற்றி தீா்வு கண்ட விவசாயிகளுக்கு நாராயணசாமி விருது வழங்கப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி மட்டும் விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வாகாது. தேசிய வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வன விலங்குகளால் பயிா்ச் சேதம் தொடா்ந்து ஏற்படுகிறது. இதைத் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், குட்டை நிரம்பும் திட்டத்தில் 3 மாவட்டங்களிலும் விடுபடாமல் அனைத்துக் குளங்களும் நிரப்பப்பட வேண்டும். மேற்குப் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிலஉரிமையாளா்களின் கருத்து கேட்ட பிறகு அளவுகோல் நட்டு சந்தை மதிப்பில் இருமடங்கு வழங்க வேண்டும். பவானிசாகா் கீழ்பவானி வாய்க்கால் மண்கரை என்பதால் ஊற்றுநீா் விவசாய நிலங்களுக்குப் பாய்ந்தோடுகிறது. கான்கிரீட் தளம் அமைத்தால் விவசாயம் பாதிக்கும். பூரண மதுவிலக்கு வரும் வரை கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com