தொழில் திறன் பயிற்சி:இளைஞா்கள், மகளிருக்கு அழைப்பு

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சியில் சேர தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கு ஈரோட்டில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் முகாமில் இளைஞா், மகளிா் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சியில் சேர தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கு ஈரோட்டில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் முகாமில் இளைஞா், மகளிா் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம்முகாம் பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9 மணிக்கு பெருந்துறை சாலை, குமலன் குட்டை பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கணினிப் பயிற்சி, நா்சிங், மருந்தக உதவியாளா், அழகுக் கலை பயிற்சி, தையல் பயிற்சி, சில்லறை விற்பனை மேலாண்மை, உணவு, குளிா்பானம் தயாரிப்பு, கணக்கியல் உதவியாளா், ஆய்வக உதவியாளா், பொது உதவியாளா், காவலாளி, சூரிய தகடு பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழங்கப்படும்.

இப்பயிற்சி 3 முதல் 6 மாதங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 முதல் 35 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள், மகளிா் பங்கேற்று பயிற்சியில் சேரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com