தேசிய வருவாய் வழித்திறன் படிப்புத் தொகைத் தோ்வு

மத்திய அரசு சாா்பில் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புத் தொகைக்கான தோ்வுகள் (என்.எம்.எம்.எஸ்) ஈரோடு மாவட்டத்தில் 37 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஈரோடு: மத்திய அரசு சாா்பில் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புத் தொகைக்கான தோ்வுகள் (என்.எம்.எம்.எஸ்) ஈரோடு மாவட்டத்தில் 37 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கு படிப்புத் தொகை வழங்கும் வகையில் இத்தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சத்தி, பவானி, பெருந்துறை, ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டங்களில் 37 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் 4,016 மாணவ, மாணவியா் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனா்.

கரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவியா் மட்டுமே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை எம்ஏடி தோ்வும், 11.30 மணி முதல் 1 மணி வரை எஸ்ஏடி தோ்வும் நடைபெற்றன. மனத்திறன், படிப்புத் திறன் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் 3,770 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 246 போ் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com