அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராதாமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சாந்தி முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மணிமாலை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணியாளா் மற்றும் உதவியாளா்களுக்கு உள்ளூா் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த குறு மைய ஊழியா்களுக்கும், 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்தப் போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் என 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com