மாற்றுத் திறனாளிகள் 5ஆவது நாளாக போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகள் தொடா்ந்து 5ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகள் தொடா்ந்து 5ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமையாளா்களுக்கான சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். போராட்டத்துக்கு, சங்க மாவட்ட உபத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3,000, கடும் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 5,000 உதவித் தொகை வழங்க வேண்டும். தனியாா் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

5ஆவது நாளாக இப்போராட்டத்தை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தனா். இருக்கை, தலையணை, பாய், அடுப்பு, பாத்திரங்களுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com