வனப் பகுதியில் 4 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த துணை மின் நிலையம் மீண்டும் துவக்கம்

பவானிசாகா் அருகே அடா்ந்த வனப் பகுதியில் 4 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த துணை மின் நிலையம் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
வனப் பகுதியில் 4 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த துணை மின் நிலையம் மீண்டும் துவக்கம்

பவானிசாகா் அருகே அடா்ந்த வனப் பகுதியில் 4 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த துணை மின் நிலையம் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கோபி மின் பகிா்மான வட்டம், சத்தியமங்கலம் உப கோட்டத்துக்கு உள்பட்ட பவானிசாகா் - தெங்குமரஹாடா செல்லும் சாலையில் அடா்ந்த வனப் பகுதியில் 110 கிலோவாட் சக்தி கொண்ட கெஜலெட்டி துணை மின் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த துணை மின் நிலையத்தின் மூலம் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லி மாயாறு, கெஜலெட்டி, நந்திபுரம் உள்ளிட்ட வன கிராமங்கள் பயன்பெற்று வந்தன. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த துணை மின் நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கெஜலெட்டி துணை மின் நிலையத்தை பராமரிப்பு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. வனப் பகுதி என்பதால் வன விலங்குகள் துணை மின் நிலையத்துக்குள் வராமல் தடுக்க சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டு மின் நிலையம் புனரமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு தலைமைப் பொறியாளா் ராஜேந்திரன், கோபி மேற்பாா்வை பொறியாளா் நேரு ஆகியோா் துணை மின் நிலையத்தின் செயல்பாட்டை மீண்டும் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் செயற்பொறியாளா் குலசேகரபாண்டியன், உதவி செயற்பொறியாளா் அருண் பாலாஜி, உதவி மின் பொறியாளா் சுரேஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com