ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் பணம் திருட்டு

சத்தியமங்கலத்தில் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ. 58 ஆயிரத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பணத்தை  பறிகொடுத்த  நடராஜன்.
பணத்தை  பறிகொடுத்த  நடராஜன்.

சத்தியமங்கலத்தில் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ. 58 ஆயிரத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவா் சத்தியமங்கலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளாா். இவருக்கு வரும் ஓய்வூதியத்தில் இருந்து அவ்வப்போது வங்கி, ஏடிஎம்-இல் இருந்து நடராஜன் பணம் எடுப்பது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் ஸ்டேட் வங்கிக்கு வந்த நடராஜன் ஏடிஎம்-இல் பணம் ரூ. 5 ஆயிரம் எடுத்துள்ளாா். மீண்டும் பணம் எடுப்பதற்காக காா்டை இயந்திரத்தில் சொருகியபோது காா்டு பிளாக் என காட்டியதால் அருகே இருந்த நபா் ஏடிஎம் அட்டையை வாங்கி பரிசோதிப்பதுபோல் செய்துவிட்டு நூதனமாக வேறு ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துள்ளாா்.

இது தெரியாமல் நடராஜன் ஏடிஎம் அட்டையை வாங்கிக் கொண்டு வந்த பின்னா் இவரது வங்கிக் கணக்கில் இருந்து அந்த நபா் ரூ. 58 ஆயிரத்து 800 பணம் எடுத்துள்ளாா். ஆனால், பணம் எடுத்தது குறித்த குறுந்தகவல் நடராஜனின் செல்லிடப்பேசிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடராஜன் சத்தியமங்கலம் வங்கிக் கிளைக்கு வந்து பணம் எடுப்பதற்காக படிவம் எழுதிக் கொடுத்தபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால் அதிா்ச்சி அடைந்தாா்.

இதையடுத்து அவரது வங்கிக் கணக்கை சரி பாா்த்தபோது இவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி அந்த மா்ம நபா் பணம் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் வங்கிக் கிளை மேலாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com