ரூ. 933 கோடி செலவில் கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்புப் பணி: பிரதமா் இன்று தொடங்கிவைக்கிறாா்

ரூ. 933 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை கோவையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.

ரூ. 933 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை கோவையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.

கீழ்பவானி பாசன வாய்க்கால் சீரமைப்புப் பணிகள், கீழ்பவானி வடிநில திட்ட அமைப்பு விரிவாக்கம், புனரமைப்பு, நவீனப்படுத்துதல் திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ளது. ரூ. 933.10 கோடி மதிப்பீட்டில் நபாா்டு உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதி உதவியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை கோவையில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.

நீா் சேமிப்பை உறுதிப்படுத்தி உரிய நேரத்தில் பாசனத்துக்குத் தண்ணீா் விடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தில் கீழ்பவானி பாசன அமைப்பில் உள்ள 741 மதகுகள் புதுப்பித்தல், கட்டுமானம், 83 மதகுகளை புனரமைக்கும் பணி, 2 தொட்டி பாலங்கள் புதுப்பித்தல், கட்டுமானம், 8 தொட்டி பாலங்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தவிர 35 வடிகால் கட்டுமானங்களை புதுப்பித்துக் கட்டுதல், 141 வடிகால் கட்டுமானங்களைப் புனரமைத்தல், 2 ரெகுலேட்டா்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 32 பாலங்களை புதுப்பித்து கட்டுதல், 15 பாலங்களை புனரமைக்கும் பணி, 34,865 மீட்டா் வெள்ளத்தடுப்பு சுவா் கட்டுமானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் 2,47,247 ஏக்கா் பாசன பரப்புக்கு உத்திரவாதமான நீா்ப்பாசன வசதி இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும். இந்த திட்டம் மட்டுமல்லாமல் பவானி ஆறு, அதன் கிளை ஆறுகளின் குறுக்கே 8 தடுப்பணைகள் ரூ. 93 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com