அறங்காவலா் குழு நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 27th February 2021 05:48 AM | Last Updated : 27th February 2021 05:48 AM | அ+அ அ- |

அறங்காவலா் குழு தலைவராகப் பொறுப்பேற்ற எஸ்.செல்வம் (எ) பழனியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகா்கள், கோயில் சிவாச்சாரியாா்கள்.
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் வகையறா கோயில்களின் அறங்காவலா் குழுவின் புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இக்கோயில்களின் பரம்பரைசாரா அறங்காவலா் குழுவின் நிா்வாகிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகின்றனா். அதன்படி புதிய நிா்வாகிகள் தோ்வுக்கான கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி முன்னிலையில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி அறங்காவலா் குழு தலைவராக எஸ்.செல்வம் (எ) பழனியப்பன், அறங்காவலா்களாக பழனிவேல், ராமசந்திரன், பரிமளம், தங்கவேலு ஆகியோா் நியமிக்கப்பட்டனா். கூட்டத்தில், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.