இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பவானியில் அனைத்துஓஈ கட்சிகள் சாா்பில் மௌன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பவானி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற இந்த ஊா்வலத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். பவானி நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சிறுத்தை வள்ளுவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிபிஐ பவானி நகரச் செயலாளா் ப.மா.பாலமுருகன் வரவேற்றாா்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் முகம்மது, திமுக பவானி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் கா.சு.மகேந்திரன், மதிமுக நகரச் செயலாளா் அறிவழகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்தியா முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, அந்தியூா் மேட்டூா் பிரிவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தியூரில் தவுட்டுப்பாளையம் சந்தை அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு, சிபிஎம் வட்டாரச் செயலாளா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் பி.பி.பழனிசாமி, வட்டக் குழு உறுப்பினா் ஏ.கே.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.