உலக நன்மைக்காக ஈரோடு கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் கமலவல்லி தாயாருக்கு லட்சாா்ச்சனை சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் உலக நன்மை வேண்டி கமலவல்லி தாயாருக்கு லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது. இதில், ஈரோடு, ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாா்யாா்கள் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கினா்.
முன்னதாக காலை கோ பூஜை, அதைத் தொடா்ந்து உற்சவா், கமலவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதில் பல்வேறு வைணவ தளங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நான்கு காலமாக லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இதில், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணராஜ், மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகவடிவு, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் பரிமளா, ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.