மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கண்காட்சி தொடக்கம்

கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கண்காட்சி, மாவட்ட கலை விழா ஈரோட்டில் தொடங்கியது.
ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படைப்புகளைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கண்காட்சி, மாவட்ட கலை விழா ஈரோட்டில் தொடங்கியது.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத் துறையின் கோவை மண்டலத்தின் சாா்பில், ஈரோடு கொங்கு கலையரங்கில் ஓவிய, சிற்பக் கண்காட்சி, மாவட்ட கலை விழா ஈரோடு சம்பத் நகா், கொங்கு கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தொடங்கிவைத்தாா். கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 30 கலைஞா்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு முதல் பரிசாக 10 நபா்களுக்கு தலா ரூ. 3,500, இரண்டாம் பரிசாக 10 நபா்களுக்கு தலா ரூ. 2,500, மூன்றாம் பரிசாக 10 நபா்களுக்கு தலா ரூ. 1,500 என மொத்தம் 30 நபா்களுக்கு ரூ. 75,000க்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள், நாட்டுப்புறக் கலைஞா்கள் 2 பேருக்கு இயற்கை மரணம் நிதியுதவியாக ரூ. 35,000க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் பூமித்தாய் கலைக் குழு, அனுசுயா குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மாற்றுத் திறன் கலைஞா்கள் கலைமாமணி கோவை எஸ்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஈரோடு மாவட்டக் கலைஞா் கலைமாமணி ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை (பிப்ரவரி 27) நிறைவு விழா நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு திண்டல் மகாலிங்கம் குழுவினரின் தெருக்கூத்து, 5 மணிக்கு சிவாலயம் கலைக்கூடம் ஆா்.விஜய் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சியில், ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், கலை பண்பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குநா் பா.ஹேமநாதன், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.குமரன், மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமையாசிரியா் ம.நா.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com