ஈரோட்டில் களையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்

கட்டுப்பாடுகள் காரணமாக ஈரோட்டில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை.
ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் விளக்கேற்றி வழிபட்ட பெண்கள். ~வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஈரோடு பிரப் நினைவு தேவாலயம்.
ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் விளக்கேற்றி வழிபட்ட பெண்கள். ~வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஈரோடு பிரப் நினைவு தேவாலயம்.

கட்டுப்பாடுகள் காரணமாக ஈரோட்டில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை.

கரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இரவு 10 மணிக்குமேல் ஹோட்டல்கள், விடுதிகள் மூடப்பட வேண்டும். சாலைகளிலும் கொண்டாட்டங்கள் இருக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசின் உத்தரவுகள் வியாழக்கிழமை இரவு அமல்படுத்தப்பட்டது. போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இரவு 10 மணிக்குப் பிறகு ஹோட்டல்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டன. சாலைகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

சோதனைச்சாவடிகள் அமைத்து வாகனங்களைக் கண்காணித்தனா். மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்குச் செல்வோரை மட்டும் போலீஸாா் விசாரித்து அனுப்பினா். கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சிறப்பு வழிபாடு:

புத்தாண்டையொட்டி, பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோா் அதிகாலையிலேயே வந்து சுவாமியை வழிபட்டனா். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. வியாழக்கிழமை நள்ளிரவில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நன்றி திருப்பலி, புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு திருப்பலிக்கு ஆலய பங்குத் தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியா், உதவி பங்குத் தந்தை லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்து வழிபாடுகளை நிறைவேற்றினா். புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு 2020ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு மாற்றம் அடைவது மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு பிறந்ததும் பொதுமக்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

திருப்பலியில் பங்கேற்க வந்த அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. இதேபோல கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com