பவானியில் உழவா் தொடா்புத் திட்டம் தொடக்கம்

பவானி வட்டாரத்தில் உழவா்களுக்கும், தோட்டக் கலைத் துறை அலுவலா்களுக்கும் இடையிலான தொடா்பை வலுப்படுத்தும் உழவா் - அலுவலா் தொடா்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நிலப்போா்வை அமைத்து நடவுப் பணிகளைப் பாா்வையிடும் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் சி.மல்லிகா, விவசாயிகள்.

இதன் மூலம் கிராமங்களில் விவசாயிகளின் வயல்களில் தொழில்நுட்ப விளக்கப் பயிற்சி அளித்தல், பண்ணைப் பள்ளிகள், கண்டுணா்வு சுற்றுலாக்கள் மூலம் நவீன தோட்டக் கலை சாகுபடி தொழில்நுட்பம், திட்டங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் விவசாயிகளை இணைத்து கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நவீன தோட்டக் கலை சாகுபடி தொழில்நுட்பங்கள், அரசின் மானியம், திட்டங்கள் குறித்து விளக்கப்படும். இத்திட்டம் மூலமாக பெரியபுலியூா் ஊராட்சியில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் சி.மல்லிகா தலைமையில், நிலப் போா்வை அமைத்து தா்பூசணி, கொய்யா, எலுமிச்சை நடவு செய்தல் குறித்து வியாழக்கிழமை விளக்கப்பட்டது. மேலும், இயற்கை விவசாயம், சொட்டுநீா்ப் பாசன தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com