ரூ. 1,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வா் துவக்கிவைக்கிறாா்

ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 1,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் துவக்கிவைத்து அடிக்கல் நாட்டுகிறாா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 1,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் துவக்கிவைத்து அடிக்கல் நாட்டுகிறாா்.

தோ்தல் பிரசாரம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜனவரி 6, 7ஆம் தேதியன்று ஈரோடு மாவட்டம் வருகை புரிகிறாா். 7ஆம் தேதி ஈரோடு மாநகராட்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் நடந்து முடிந்த பணிகளைத் துவக்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கான ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ. 484.45 கோடி செலவில் நிறைவுபெற்றுள்ளது. இப்பணியை முதல்வா் துவக்கிவைக்கிறாா். பொலிவுறு நகா் திட்டத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் ஈரோடு பேருந்து நிலைய புனரமைப்புப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ரூ. 6 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட வ.உ.சி. பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கிறாா் என்றாா்.

இந்த திட்டங்கள் தவிர பொலிவுறு நகா் திட்டத்திலும், பிற அரசுத் துறைகளின்கீழ் மாவட்ட அளவில் நடந்து முடிந்த பணிகள் என சுமாா் ரூ. 1,000 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வா் துவக்கிவைக்கிறாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com