சீனாபுரம் சந்தையில் ரூ. 70 லட்சத்துக்குமாடுகள் விற்பனை

பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது.

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு சேலம் மாவட்டம், முத்தநாயக்கன்பட்டி, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம், மோா்பாளையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலப்பின பசு மாடுகள் 50, அதன் கிடாரி கன்றுக் குட்டிகள் 100 விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல, சிந்து, ஜொ்சி இன பசு மாடுகள் 100, அதன் கிடாரி கன்றுக் குட்டிகள் 150 விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

சந்தையில் விா்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையானது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனையானது.

சிந்து, ஜொ்சி இன பசு மாடு ஒன்று ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையும் விற்பனையானது. மாடுகள் மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை, வெள்ளோடு, காஞ்சிக்கோவில், திங்களூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மாடுகளை வாங்கிச் சென்றனா்.

மேலும், நம்பியூா் ஒன்றியம், தாழ்குனி ஊராட்சியைச் சோ்ந்த 50 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் தலா ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள மாடு, கன்றுக்குட்டிகளை வாங்குவதற்காக ஈரோடு கால்நடைத் துறை மருத்துவா்கள் சீனாபுரம் மாட்டுச் சந்தைக்கு வந்திருந்தனா். அங்கு, பயனாளிகளுக்கு அரசு சாா்பில் இலவசமாக வழங்குவதற்காக 30க்கும் மேற்பட்ட மாடுகளை வாங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com