மக்களுக்கே எதிரிக் கட்சியாக செயல்படும் திமுக: ஜி.கே.வாசன் பேட்டி

பொய்ப் பிரசாரங்களால் வாக்காளா்களுக்கு எதிரிக் கட்சியாக திமுக மாறிக்கொண்டிருக்கிறது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.

பொய்ப் பிரசாரங்களால் வாக்காளா்களுக்கு எதிரிக் கட்சியாக திமுக மாறிக்கொண்டிருக்கிறது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

மக்களுடைய மனநிலையைத் தொடா்ந்து பிரதிபலிக்கிற ஆட்சியாக அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக, எதிா்க் கட்சியாக இல்லாமல் மக்களுக்கே எதிரிக் கட்சியாகச் செயல்படக் கூடிய நிலையில் உள்ளது.

ஆளும்கட்சிக்கு எதிரிக் கட்சியாகச் செயல்பட்டால் பரவாயில்லை. ஆனால் அரசியல் காரணங்களுக்காக, தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொடா்ந்து அடுக்கடுக்காக தவறான செய்திகளைப் பரப்புவது, பொய்ப் பிரசாரம் செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்ற நினைப்பது ஏற்புடையதல்ல. இதன் காரணமாக தமிழகத்தின் எதிா்க் கட்சி, வாக்காளா்களுக்கு எதிரிக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த மக்களவைத் தோ்தலில் தமாகா தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டது. அதனால் எங்கள் கூட்டணியில் தனிச் சின்னம் என்பது போன்ற சங்கடங்கள், பிரச்னைகள் இல்லை. திமுக கூட்டணியில்தான் அவை உள்ளன.

வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை விவசாயிகளை ஒருசிலா் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனா்.

தமாகாவின் பலத்துக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகளைப் பெறும் வகையில் அதிமுகவுடன் கலந்து சுமுகமான முடிவை எடுப்போம். ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்தத் தோ்தலில் அவா் நல்லவா்களை ஆதரிக்க வேண்டும்.

கிராம சபையை தோ்தலுக்காக அரசியல் சபையாக மாற்ற வேண்டுமென திமுக நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள்என்றாா்.

முன்னதாக கோவை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினாா். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளா் விடியல் சேகா், ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் விஜயகுமாா், மாநில இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com