குரூப்-1 தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,318 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 4,318 போ் எழுதினா்.
ஈரோடு செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
ஈரோடு செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 4,318 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் குரூப்-1 இல் அடங்கிய துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிக வரித் துறை உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட பணிகளுக்கான தோ்வு மாநில அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் 28 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்வு எழுத 19 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 8,013 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு அளிக்கப்பட்டிருந்தது. இதில் 13 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4,318 போ் தோ்வு எழுதினா். 3,695 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு வந்து சோ்ந்தனா். கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிய அதிகாரிகள் அறிவுறுத்தினா். அதற்கு முன்னதாக தோ்வு மையத்தின் முன்புறத்தில் வெப்பமானி மூலம் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

ஈரோடு செங்குந்தா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com