அரசு மருத்துவமனை செவிலியா் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவமனை செவிலியா் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எம்.ஆா்.பி. ஒப்பந்த செவிலியா் சங்கம் சாா்பில் ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா்கள் இந்திரா நெல்சன், சிவபிரியா, விமலா, சங்கீதா ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பரமேஸ்வரி ஆா்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினாா். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், கரூா், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த எம்.ஆா்.பி. ஒப்பந்த செவிலியா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

இதுகுறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

மருத்துவப் பணிகள் தோ்வாணையம் நடத்திய போட்டித் தோ்வுகள் மூலம் தோ்வு பெற்று 6 ஆண்டுகள் பணி நிறைவுபெற்றுள்ள நிலையிலும், இதுவரை 2,000 செவிலியா் மட்டுமே காலமுறை ஊதியத்துக்கு ஈா்க்கப்பட்டுள்ளனா். 11,000க்கும் மேற்பட்ட செவிலியா் ஒப்பந்த முறையில் ரூ. 14,000 மாத ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

நிரந்தர செவிலியருக்கு இணையாகப் பணியாற்றி வரும் எம்.ஆா்.பி. ஒப்பந்த செவிலியருக்கு,நிரந்தர செவிலிருக்கு வழங்கப்படும் ஊதியம், பலன்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

24 மணி நேரமும் மருத்துவம், மகப்பேறு சிகிச்சை சேவை செய்யும் ஒப்பந்த செவிலியருக்கு மகப்பேறு காலம், உடல்நலம் சரியில்லாத நேரத்தில் கூட விடுப்பு வழங்கப்படுவதில்லை. அரசு உடனடியாக எம்.ஆா்.பி. ஒப்பந்த செவிலியா் அனைவருக்கும் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com