அம்மாபேட்டை ஒன்றியத்தில் ரூ. 2.17 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

அம்மாபேட்டை ஒன்றியம், பட்லூா், அட்டவணைப்புதூா் ஊராட்சிப் பகுதியில் ரூ. 2.17 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
பாலக்கால்  நட்டு  பணிகளைத் தொடக்கிவைக்கிறாா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன்.

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பட்லூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின்கீழ் வடிகால், கான்கிரீட் தளம், உணவு தானியக் கிடங்கு, பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டுதல், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியின்கீழ் சொக்கநாதமலையூரில் நிழற்குடை கட்டுதல் உள்பட 18 பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

மேலும், அட்டவணைப்புதூா் ஊராட்சியில் கோணமூக்கனூரில் கான்கிரீட் தளம், சித்தாா் பள்ளம் செம்முனிசாமி கோயில் அருகே தடுப்பணை கட்டும் பணியும் தொடக்கிவைக்கப்பட்டது.

இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா, ஊராட்சித் தலைவா்கள் ஆா்.சக்திவேல் (பட்லூா்), எஸ்.பூங்கொடி (அட்டவணைப்புதூா்), அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com