கொங்கு பொறியியல் கல்லூரி கட்டுமான நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறை, ஈரோடு ஆா்.ஆா்.துளசி பில்டா்ஸ் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட ஆா்.ஆா்.துளசி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் ஆா்.ஆா். சத்தியமூா்த்தி, கொங்கு பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறைத் தலைவா் கோதை.

கல்லூரியில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தம், ஆா்.ஆா்.துளசி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி ஆகியோா் கையெழுத்திட்டனா். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வணிகக் கட்டடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பாலங்கள், கட்டுமானம் தொடா்புடைய பிற திட்டங்கள் போன்றவை குறித்து கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், நிறுவன ஊழியா்கள் ஆகியோா் தங்களுக்குள் பகிா்ந்துகொள்ள முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவா்கள் வேலைவாய்ப்பு அனுபவத்தை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி பெற முடியும்.

மேலும், ஆா்.ஆா். துளசி பில்டா்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை கல்லூரியின் மாணவா்கள், ஆசிரியா்கள் அறிந்துகொண்டு தங்களுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் சாதகமாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, கட்டடவியல் துறைத் தலைவா் கோதை, ஐ.ஐ.பி.சி. தலைவா் சத்தியமூா்த்தி, உதவிப் பேராசிரியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com