கோயில் சிலையைத் திருடிய நபா் கைது

ஈரோட்டில் கோயில் சிலையைத் திருடிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோட்டில் கோயில் சிலையைத் திருடிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சாஸ்திரி நகா், கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலில் ஐம்பொன்னாலான முருகன் சிலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருட்டுப் போனது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 80,000 ஆகும்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிலையைத் திருடிய மா்ம நபரைத் தேடி வந்தனா். சிலை திருடியவரைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உத்தரவின்பேரில் ஆய்வாளா் ரவிகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கோயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.விசாரணையில் சிலையைத் திருடியவா் ஈரோடு, மோளகவுண்டம்பாளையம், கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (55) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் ரவிகுமாா், போலீஸாா் மோளகவுண்டம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஈரோடு நாடாா்மேடு, பழையகள்ளிவலசு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வெங்கடேஷிடம் இருந்து ஐம்பொன் சிலையையும், மூன்றரை பவுன் நகையையும் போலீஸாா் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com