தாளவாடியில் பலத்த மழை: ரூ. 50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளக் கதிா்கள் சேதம்

தாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது.

தாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோ்மாளம், பூதாளபுரம், மாவள்ளம், தேவா்நந்தம், அட்டப்பாடி, புதுக்காடு, கோட்டாடை, குளியாடா, குரிமந்தை, ஆசனூா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பிரதான சாகுபடி பயிராக உள்ளது. மானாவாரி சாகுபடியான மக்காச்சோளம் 3 மாதகாலப் பயிா் என்பதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டனா். தற்போது மக்காச்சோளப் பயிரில் கதிா் முதிா்ந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வந்தது. 250க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை களத்தில் உலர வைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் களத்தில் உலர வைக்கப்பட்ட மக்காச்சோளம் முழுவதும் மழையில் நனைந்து முற்றிலும் சேதமானது. சில இடங்களில் மக்காச்சோளம் முளைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் களத்தில் போட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது. இதனால் ரூ. 50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் கூறியதாவது:

ஏக்கா் ஒன்றுக்கு 2 டன் மகசூல் கிடைத்தது. டன் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் விற்கப்பட்ட நிலையில் ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சமாக ரூ. 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து மீளமுடியாத நிலையில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com