நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சாலைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதைக் கைவிட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதைக் கைவிட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். சாலைப் பணியாளா்களை அரசு ஊழியா்கள் என அறிவிக்க வேண்டும். சாலைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதைக் கைவிட வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளைத் தளா்த்தி பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட துணைத் தலைவா் ராஜ், இணை செயலாளா் நாராயணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க மாவட்டச் செயலாளா் அரங்கசாமி, மாநில துணைத் தலைவா் வெங்கிடு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com