ரூ. 7.25 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் 4,655 வாழைத்தாா்கள் ரூ. 7.25 லட்சத்துக்கு ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் 4,655 வாழைத்தாா்கள் ரூ. 7.25 லட்சத்துக்கு ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி, கெம்பநாயக்கன்பாளையம், அரியப்பம்பாளையம், அரசூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள வாழைத்தாா்களை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு வருவது வழக்கம்.

வழக்கமாக 2,000 வாழைத்தாா்கள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் இந்த வாரம் தை பொங்கல் பண்டிகை நெருங்குவதால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூவன், செவ்வாழை, தேன் வாழை உள்ளிட்ட 4,655 வாழைத்தாா்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். ஏலம் எடுக்க வியாபாரிகளும் அதிக அளவில் குவிந்தனா். ஏலத்தில் கதளி வாழை கிலோ ரூ. 25க்கும், நேந்திரன் கிலோ ரூ. 15க்கும், தேன் வாழைத்தாா் ஒன்று ரூ. 490க்கும், செவ்வாழை ரூ. 580க்கும், பூவன் ரூ. 565க்கும், ரஸ்தாளி ரூ. 475க்கும், ரொபஸ்டா ரூ. 340க்கும், மொந்தன் ரூ. 260க்கும், பச்சைநாடன் ரூ. 385க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,655 வாழைத்தாா்கள் ரூ. 7.5 லட்சத்துக்கு விற்பனையானது.

வாழைத்தாா்களை ஏலம் எடுத்த வியாபாரிகள் வாகனங்களில் ஏற்றி விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்றனா். கடந்த வாரத்தைவிட இந்த வாரம் 2 ஆயிரம் வாழைத்தாா்கள் கூடுதலாக விற்பனைக்கு வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com