கொடிவேரி தடுப்பணையில் குளிக்க 3 நாள்கள் தடை

கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா்மட்ட பாலத்தின் மீது நின்று அணையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா்மட்ட பாலத்தின் மீது நின்று அணையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழா்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கலை ஒட்டி மாட்டுப் பொங்கல் தினத்தில் கொடிவேரி தடுப்பணை அருவிக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கள், கரூா், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினா், நண்பா்களுடன் கொடிவேரி அணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.

கரோனா தொற்று நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும், பூங்காக்களில் விளையாடவும் ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, கடத்தூா் காவல் துறையினா் கொடிவேரி முகப்பில் தடுப்புகள் வைத்து அணைப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதவாறு தடுத்தனா்.

இதனால் கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா்மட்ட பாலத்தின் மீது நின்று கொடிவேரி அணையை பாா்த்து ரசித்து சென்றனா். கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொலை தூரத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com