தைப்பூச தேரோட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி சென்னிமலையில் 19ஆம் தேதி கடையடைப்பு

சென்னிமலையில் தைப்பூச தேரோட்டத்துக்கு அனுமதி அளிக்க கோரி ஜனவரி 19ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு அமைப்பினா் அறிவித்துள்ளனா்.

சென்னிமலையில் தைப்பூச தேரோட்டத்துக்கு அனுமதி அளிக்க கோரி ஜனவரி 19ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு அமைப்பினா் அறிவித்துள்ளனா்.

சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் கரோனா பரவல் தடையால் நடத்த அனுமதி வழங்க இயலாது என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னிமலை பாஜக தமாகா, பாமக, தேமுதிக, ஹிந்து அமைப்புகள், நகர வணிகா்கள் சங்கம் சாா்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற தைப்பூச தோ்த் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கோயில் நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் கரோனா தொற்றை காரணம் காட்டி தேரோட்டத்தை நடத்த அனுமதி மறுத்துள்ளது.

அனைத்து அரசு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஜல்லிக்கட்டு போன்ற அனைத்துக்கும் அனுமதி வழங்கி விட்டு கோயில் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி மறுப்பது உள்நோக்கம் கொண்டதாகும். எனவே, அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் தைப்பூச தேரோட்டத்துகு அனுமதி வழங்க வலியுறுத்தி சென்னிமலை வட்டாரத்தில் ஜனவரி 19 ஆம் தேதி கடையடைப்பு நடத்தி, சென்னிமலை கைலாசநாதா் கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பக்தா்க, பொது மக்கள், பல்வேறு அமைப்பினா், வணிகா்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com