கீழ்பவானி பாசனப் பகுதிகளில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பாசனப் பகுதிகளில் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கத் திட்டமிட்டு முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை 8 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பாசனப் பகுதிகளில் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கத் திட்டமிட்டு முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை 8 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நெல் பயிா் முதிா்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய ஏதுவாக 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

முதல்கட்டமாக நசியனூா், பவானி, அம்மாபேட்டை, நாகரணை, உக்கரம், கவுந்தப்பாடி, பெரியபுலியூா், பள்ளபாளையம் ஆகிய 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொடுமுடி, அஞ்சூா், வெள்ளோடு, வாய்க்கால்புதூா், கே.ஜி.வலசு, மொடக்குறிச்சி, அறச்சலூா், தட்டாம்பாளையம், அவல்பூந்துறை, எழுமாத்தூா், சிவகிரி, கஸ்பாபேட்டை ஆகிய 12 இடங்களில் ஜனவரி 25ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தொடங்கும்.

இந்த 20 நெல் கொள்முதல் நிலையங்களுடன் இப்போது செயல்பாட்டில் உள்ள புதுவள்ளியாம்பாளையம், கரட்டடிபாளையம், காசிபாளையம், பொலவக்காளிபாளையம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம் கொள்முதல் நிலையங்கள் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் அறுவடை பணிகள் முடியும் வரை தொடா்ந்து செயல்படும்.

மையங்களில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,958 வீதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,918 வீதத்திலும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இம்மையங்களில் விற்பனை செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com