1,210 பேருக்கு கரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,210 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,210 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களான மருத்துவா், செவிலியா் மருத்துவமனைப் பணியாளா்களுக்கு கரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, பவானி, கோபி அரசு மருத்துவமனை, சிறுவலூா் ஆரம்ப சுகாதார நிலையம் என 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல்நாளில் 99 போ் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

பொங்கல் விடுமுறையாக இருந்ததால் முதல் மூன்று நாள்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வோா் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதன்பின் தினமும் 300 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். வெள்ளிக்கிழமை வரை 1,210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்களப் பணியாளா்களான 13,800 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் மருந்துகள் தயாா் நிலையில் உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com