3 வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா

பவானியை அடுத்த வரதநல்லூரில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் மூன்று போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பவானியை அடுத்த வரதநல்லூரில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் மூன்று போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலையம் பவானியை அடுத்த வரதநல்லூரில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு, வெளி மாநிலத் தொழிலாளா்கள் 30க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா். பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளும் வகையில் இங்கு மேலும் 6 வெளி மாநிலத் தொழிலாளா்கள் கடந்த சில நாள்களுக்கு முன் அழைத்து வரப்பட்டனா்.

ஈரோடு தனியாா் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இவா்களில் மூவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதுகுறித்த தகவலின்பேரில் ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் தனலட்சுமி மற்றும் மருத்துவக் குழுவினா் வரதநல்லூரில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளா்கள் குடியிருப்புக்குச் சென்று அங்கு தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா். இவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகேந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் என்.தமிழ்செல்வன், என்.சதீஸ்குமாா் கொண்ட குழுவினா் மேற்பாா்வையில் கிருமிநாசினி தெளித்து அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com